மூளையை பாதித்த விஷச் சாராயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கோட்டூரில் விற்பனை செய்யப்ட்ட கள்ளச்சாராயத்தில் கலந்திருந்த மருந்துபொருள் என்ன என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை பரிசோதித்த பின்24 மணி நேரத்திற்குள் அறிக்கை வெளியிடப்படும் என்று சென்னை ஸ்டான்லிமருத்துவமனையின் டீன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூரில் விஷசாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகஉயர்ந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை கோட்டூரில் 50க்கும் அதிகமானோர்கள்ளச்சாராயம் குடித்தனர். சாராயத்தை குடித்தவுடன் பலரும் அங்கேயே மயங்கிவிழுந்தனர்.

இவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்தவமனையிலும், வேறு சில தனியார்மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 20 பேர் சிகிச்சைபலனின்றி இறந்து போனார்கள்.

கள்ளச்சாராயத்தில் என்ன விதமான பொருட்கள் கலந்திருக்கக்கூடும் என்பது குறித்துசென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் ரவீந்திரநாத் கூறியதாவது:

வழக்கமாக கள்ளச் சாராயத்தில் போதைக்காக மெத்தைல் ஆல்கஹால் என்ற பொருள்கலக்கப்படும். இது குடித்தவர்களின் கண் பார்வையை மட்டுமே பாதிக்கும்.பெரும்பாலும் உயிரைப் பறிக்காது.

ஆனால் வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் குடித்தவர்களில் யாருடைய கண்பார்வையும் பாதிக்கப்படவில்லை. எனவே இவர்கள் குடித்த சாராயத்தில் மெத்தைல்ஆல்கஹால் கலந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.

கள்ளச் சாராயத்தில் ஒரு பவுடரை கலந்து குடித்ததாக மருத்துவனையில்அனுமதிக்கப்பட்ட பலரும் கூறினார்கள். அது என்ன மருந்து என்று அவர்களுக்குத்தெரியவில்லை. சாராயம் குடித்தவர்கள் அனைவரும் வாந்தி எடுத்து மயங்கிவிழுந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர்களை பரிசோதித்த போது அவர்கள் நரம்புமண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தோம். சிகிச்சை வந்தவர்கள்அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள்அனைவருக்கும் நரம்பு தளர்ச்சியும் ஏற்பட்டது.

உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்து 24 மணிநேரத்திற்குள் அவர்கள் குடித்த சாராயத்தில் எந்த மாதிரியான பொருட்கள்கலந்திருந்தன என்பது குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றார்ரவீந்திரநாத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+