அத்வானி வீட்டருகே குடியேற முயன்ற 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய உள்துறை அமைச்சர் அத்வானியின் வீட்டுக்கு அருகே ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் குடியேற முயன்ற 2 பேரைபோலீசார் கைது செய்தனர்.

அர்ஷத், மொய்னுதீன் என்ற இந்த இருவரும் அத்வானியின் வீட்டுக்கு அருகே உள்ள மிசோரம் மாநில காங்கிரஸ் எம்.பியான ஹிபேய்என்பரின் அரசு வீட்டில் ஒரு அறையை வாடகைக்குக் கேட்டுள்ளனர்.

பண்டாரா பார்க் பகுதியில் உள்ள சி1/11 என்ற பிளாக்கில் இந்த வீடு உள்ளது. எம்.பியின் உதவியாளரை மடக்கி இந்த அறையை இவர்கள்வாடகைக்கு எடுக்க முயன்றனர். எம்.பியின் உதவியாளருடன் வாடகை, அட்வான்ஸ் விவரங்களைப் பேசிவிட்டுத் திரும்பிய அவர்களைஅத்வானியின் வீட்டில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகவே டெல்லியில் வசித்து வருவதாகவும் செளத் எக்ஸ்டென்சனில் உள்ள நிறுவனத்தில் பணி புரிந்துவருவதாகவும் தெரிவித்தனர்.

மொகினுதீன் சமீப காலத்தில் 4 முறை சவுதி அரேபியாவுக்கு சென்று வந்துள்ள விவரமும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மிசோரம் எம்.பியின் உதவியாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

அத்வானியின் உயிருக்கு ஆபத்து அதிகரித்திருப்பதாக பல்வேறு உளவுப் பிரிவுகள் தகவல் கொடுத்ததையடுத்து அவருக்கு பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நிறைந்த இந்தப் பகுதியை விட்டு வேறிடத்தில் குடியேறுமாறும் அவரை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+