10 ஆண்டுகளில் 341 விஷச்சாராய சாவுகள்: டி.ஜி.பி.
சென்னை:
தமிழகத்தில் சென்ற 10 ஆண்டுகளில் மட்டும் 50 விஷச்சாராய சாவு சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் இதில் 341பேர் பலியாகியுள்ளனர் என்றும் தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அளித்த பேட்டியின் போது கூறியாதவது:
தமிழகத்தில் சென்ற 1991ம் ஆண்டு முதல் இன்றுவரை 10 ஆண்டுகளில் மொத்தம் 50 விஷச்சாராய சாவுசம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 341 பேர் இறந்து போயுள்ளனர்.
1998ம் ஆண்டு மட்டும் 7 விஷச்சாராய சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 69 பேர் உயிரிழந்தனர். 301 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 1999ம் ஆண்டில் 4 விஷச் சாராய சம்பவங்கள் நடந்தன. இவற்றில் 25 பேர்பலியானார்கள். 2000மாவது ஆண்டில் நடந்த 2 சம்பவங்களில் 16 பேர் பலியானார்கள்.
இந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்களில் இதுவரை 45 பேர் இறந்துள்ளனர்.
சென்ற மாதம் அம்பத்தூர், மேனாம்பட்டு கிராமத்தில் விஷச்சாராயக் குடித்து 13 பேர் இறந்து போனார்கள்.
தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் இதுவரை 36 பேர் இறந்துள்ளனர்.
சென்ற 10 ஆண்டுகளில் விஷச்சாராயம் குடித்து இறந்து போன 341 பேரில் 171 பேர் மெத்தனால் என்றவிஷத்தாலேயே இறந்துள்ளனர். மெத்தனால் மிகக் கொடிய விஷம் இதை சில துளிகள் சாப்பிட்டாலே சாவுநிச்சயம்.
மெத்தனால் என்பது சாராயமும் அல்ல. மெத்தனால் மருந்துகள் தயாரிக்க சில தொழிற்சாலைகளில்உபயோகிக்கப்படுகிறது. சில தொழிற்சாலைகளில் உலோகங்களை உருக்கவும் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் மெத்தனாலை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் 120 உள்ளன. இந்த தொழிற்சாலைகளைவரைமுறைபடுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று கூறினார் நெய்ல்வால்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications