திருச்சியில் 10 ரூபாய் பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதியளித்த மதிமுக வேட்பாளர்
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் 51வது வார்டுக்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் புது விதமான பிரச்சார யுக்தியைபயன்படுத்தியுள்ளார்.
மக்களை கவர்வதற்காக திரைப்பட நட்சத்திரங்கள், விதவிதமான சுவரொட்டிகள், நோட்டீசுகள் என்று பலஅரசியல் கட்சிகளும் விதவிதமான பிரச்சார முறைகளை கையாண்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 51வது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணன் புதிய பிரச்சாரமுறையை கையாண்டுள்ளார். இது அந்த வார்டில் போட்டியிடும் பிற அரசியல் கட்சியினர் இடையேயும், சுயேட்சைவேட்பாளர்கள் இடையேயும், அந்த வார்டு மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் திருச்சி 51வது வார்டுவேட்பாளர் கிருஷ்ணன், 10 ரூபாய் பத்திரத்தில் தனது தேர்தல் வாக்குறுதிகளை கம்ப்யூட்டர் மூலம் டைப் செய்துஅதை 10 ஆயிரம் ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வீடுவீடாக சென்று கொடுத்துள்ளார்.
பத்திரத்தில் அவர் கூறியுள்ளதாவது:
திருச்சி நகரின் 51வது வார்டு பெருமக்களுக்கு கிருஷ்ணன் எழுதுவது வணக்கம். பி.காம் பட்டதாரியான நான்வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடுகிறேன். சென்ற முறை என்னை இரண்டாம் இடம்பெறவைத்த மக்களுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்த முறை என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். என்னை வெற்றிபெற வைத்தால் குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை, சாலைகள் சீர்செய்வது, தெரு விளக்குகள் போடுவது போன்றமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்.
உங்களுக்காக நான் மாநகராட்சியில் குரல் கொடுப்பேன். எந்த சமயத்திலும் லஞ்சம் வாங்க மாட்டேன். என் மீதுகுற்றம் சுமத்தி நிரூபித்தால் என்னை தெருக்களில் நிற்க வைத்து நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வேன். என் பதவியையும் ராஜினாமா செய்வேன். இதற்கு நான் கொடுத்துள்ள பத்திரமேசாட்சி.
ஜனநாயகத்தின் வாளாகிய வாக்குச் சீட்டை பயன்படுத்துங்கள் என்று கிருஷ்ணன் அந்தப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
இது போல் பத்திரத்தின் மூலம் பிரச்சாரம் செய்திருப்பதற்கு தேர்தல் சட்டத்தில் எந்தவிதமான தண்டனையும்குறிப்பிட்டுக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களுக்கும் கிருஷ்ணன் பயன்படுத்தியுள்ள புதிய பிரச்சார முறை குழப்பத்தையேஎற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலிலும் சில அதிமுகவினர், பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதி அளிக்கும் இந்த நூதனமுறையைக் கடைப்பிடித்தனர் என்பது நினைவு கூறத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications