பாகிஸ்தானின் முழுவதும் கலவரம்: தியேட்டர்-காவல்நிலையம் எரிப்பு

Subscribe to Oneindia Tamil

குவேட்டா:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து பாகிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) பல்வேறு இடங்களில்பயங்கர வன்முறை வெடித்தது.

பல இஸ்லாமிய கட்சிகள் இந்தத் தாக்குதலுக்கு எதிராக புனிதப் போர் தொடுக்க அழைப்பு விடுத்துள்ளன.

முதலில் குவெட்டா நகரில் தான் கலவரம் வெடித்தது. இந் நகரில் சுமார் 10,000 பேர் அமெரிக்காவை எதிர்த்து இன்று கண்டனப் பேரணிநடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

பேரணியில் வந்தவர்கள் போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். ஒரு திரையரங்கத்தையும், போலீஸ் நிலையத்தையும் தீ வைத்துஎரித்தனர்.

பல பஸ்களும் எரிக்கப்பட்டன. இதையடுத்து வன்முறையாளர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். இதில்ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

மேற்கு பாகிஸ்தானில் உள்ள இந்த நகரம் ஆப்கானிஸ்தானின் அருகே உள்ளது. இங்குள்ள விமானப் படைத் தளத்தைத் தான் அமெரிக்காபயன்படுத்தி வருகிறது.

அவர்கள் மேலும் பல கட்டடங்களுக்கும் பஸ்களுக்கு தீ வைத்தனர். பல வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தையடுத்து அந்த நகரம் முழுவதும் பெரும்பதற்றம் நிலவுகிறது.

கராச்சி:

பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரமான கராச்சியிலும் வன்முறை வெடித்தது. இங்கு போராட்டக்காரர்கள் 3 பஸ்களுக்கு தீ வைத்தனர். வடமேற்கு பெஷாவர் மாகாணத்தில் ஒரு பெரிய பள்ளி வாசலில் கூடிய இவர்கள் கராச்சிக்கு ஊர்லவமாக வந்து போராட்டம் நடத்தினர்.துப்பாக்கிச் சூடு:

ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள லந்திகோடலில் நடந்த தலிபான் ஆதரவுப் பேரணியைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை எதிர்த்து ஒவ்வொரு முஸ்லீமும் புனிதப் போர் நடத்த வேண்டும் என பாகிஸ்தானில்உள்ள ஆப்கானிஸ்தான் டிபன்ஸ் கவுன்சில் தலைவர் ரியாஸ் துரானா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்தஅனைவரையும் போலீசார் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த ஆர்பாட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+