தீவிரவாதிகள் தாக்குதலை சமாளிக்க டில்லியில் தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கடந்த வாரம் காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் 1ம் தேதி (திங்கள்கிழமை) தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் ஸ்ரீநகரிலுள்ள சட்டசபைவளாகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 42 பேர் கொல்லப்பட்டனர் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தற்கொலை படையினர் தாக்குதலைஎவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி துணைபோலீஸ் கமிஷனர் முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

டில்லியிவ் உள்ள முக்கிய இடங்கள் எல்லாவற்றிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியிலும் கூடுதல்எண்ணிக்கையிலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் ஸ்ரீநகர் சட்டசபை வளாகத்தின் மேல் தாக்குதல் நடத்தினர். இது போன்றதாக்குதல் நடத்தப்பட்டால் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த போலீசாருக்கு பயிற்சி அளிக்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம்,பிரதமர் இல்லம் ஆகிய இடங்களில் அதிகபட்சபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ராணுவ தலைமையகம், விமானப்படை, கடற்படைதலைமையகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் எந்த விதமான தாக்குதல் நடத்தினாலும் போலீசார் அதைசமாளிக்க தயாராக உள்ளனர் என்றார் முகேஷ் குமார்.

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மறுத்ததையடுத்து,ஆப்கன் நகரங்கள் மீது அமெரிக்கா தற்போது தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+