காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரியல்ல - சிதம்பரம்
மதுரை:
காஷ்மீர் விஷயத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு தவறான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது என்றுகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.
மதுரையில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
"எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம்" என்று இந்திய கதறிக் கொண்டிருப்பதைஅமெரிக்கா காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு பாகிஸ்தானின் தேவைதான் இப்போதுஅத்தியாவசியமாக இருக்கிறது. எனவே அவர்கள் சொல்வதுதான் காதில் விழுகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா தற்போது ஆரம்பித்துள்ள போர் முடிவடைந்து, பின்லேடனைப்பிடித்துவிட்டாலும் அமெரிக்கர்கள் காஷ்மீர் பிரச்சனை மீது அக்கறை காட்டுவார்களா என்பது சந்தேகமே.
மேலும் அந்தப் போர் முடியும் பட்சத்தில் காஷ்மீர் பிரச்சனை அவர்களுக்கு இரண்டாம் பட்சமாக இருக்குமாஅல்லது மூன்றாம் பட்சமாக இருக்குமா என்தே சந்தேகம் தான்.
மேலும் ஆப்கான் போரினால் இந்தியப் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படப் போவது நிச்சயம். பெட்ரோலியப்பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யயப்படும் பொருட்களின் அளவும், ரூபாய் மதிப்பும் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
இதற்கெல்லாம் தேசிய ஜனநாயக் கூட்டணி சர்வதேச அளவில் கடைபிடித்து வரும் தவறான அணுகுமுறைதான்காரணம். இந்தியாவின் பொருளாதாரத்தை நலிவடைந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டியதுமத்திய அரசின் பொறுப்பு என்றார் சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications