சென்னையில் ஒரு சபாஷ் வேட்பாளர்!
சென்னை:
தேர்தல் பிரசாரம் செய்வது ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதால் போன் செய்தும், நண்பர்களை அனுப்பியும்தனக்காக பிரசாரம் செய்து வருகிறார் சென்னை வேட்பாளர் ஒருவர்.
சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் சுபாஷ். இவர் தமிழ் நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டுவாரியத்தில் பணியாற்றியவர். தற்போது 155-வது வார்டில் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரதிதற்காக இவர் ரொம்பக் கஷ்டப்படவில்லை. தனது நண்பர்களை அழைத்து தனக்காக தேர்தலில்பிரசாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இவரும் முடிந்தால் சில வீடுகளுக்குப் போய் ஓட்டுக் கேட்பார். மற்றபடி ஆட்டோவில் குழாயைக் கட்டிக் கொண்டுகொள்கை முழக்கமிடுவது, துண்டுப் பிரசுரங்கள் அடிப்பது, சுவர்களில் விளம்பரம் செய்வது என வழக்கமானஎந்தவிதமான பிரசார யுக்தியையும் அவர் கடைப்பிடிக்கவில்லை.
இதன் உச்சகட்டமாக வீட்டில் ஹாயாக அமர்ந்து கொண்டு தனது வார்டுக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் போன்செய்து, சார், எனக்கே ஓட்டு போடுங்க, மறக்காம ஓட்டுப் போடுங்க என போன் பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்திற்காக செலவு செய்தால் அதுவும் ஒருவகையில் லஞ்சம் கொடுத்ததற்கு சமம் என்று கருதும் சுபாஷின்தேர்தல் யுத்தி அவரது வார்டில் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளது.
சுபாஷுக்கு மக்கள் ஓட்டுப் போட்டால் சபாஷ்தான்!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications