மதவாதம் பற்றி கம்யூனிஸ்ட்டுகள் பேச அருகதை இல்லை - கருணாநிதி
சென்னை:
பீகாரில் ஜனசங்கத்துடன் கூட்டணி வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதவாதத்தைப் பற்றிப் பேசக்கூடாதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மதவாத பாரதிய ஜனதாவை ஆதரிப்பவர் என்பதால் கருணாநிதிதான் மிகப் பெரும் சந்தர்ப்பவாதி என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்து கருணாநிதிநிருபர்களிடம் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். உள்ளாட்சி மன்றப் பதவிகள் மூலம்தான்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும்.
திமுகவை மதவாதக் கட்சி என்றும், சந்தர்ப்பவாதக் கட்சி என்றும் கம்யூனிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். பீகாரில்ஜனசங்கத்துடன் கூட்டணி வைத்துள்ளதை, தமிழகக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.
மேலும் காவிரி நீர்ப்பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட இடைக்காலத் தீர்ப்பைசெயல்படுத்துவதற்காகத்தான் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அது தேவையற்றது என்றுஎதிர்த்தவர்கள், இன்று அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
இன்று கூடிய காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications