தேனி அருகே மார்க் குறைந்ததால் மாணவன் தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

தேனி:

காலாண்டு தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் 6 வகுப்பு படிக்கும் மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்யமுயற்சி செய்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேனி, பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ்வரன் (11). இவன் தேனியிலுள்ள தனியார் பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வருகிறார்.

சமீபத்தில் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. விடுமுறை முடிந்து பள்ளி திறந்தபின் காலாண்டு தேர்வுவிடைத்தாள்கள் கொடுக்கப்பட்டன.

சதீஸ்வரன் சில பாடங்களில் குறைவான மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெறவில்லை. குறைவான மார்க்குகள்வாங்கியது பெற்றோருக்கு தெரிந்தால் திட்டும், அடியும் விழும் என்று பயந்தான் சதீஸ்வரன். இந்த கவலைஅவனை வாட்டி வந்தது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று சதீஸ்வரன் தன் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டான். ஆனால், தீயின் வெப்பம் தாளாது அவன் அலறத் தொடங்கினான். அவனது மரணஓலத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சதீஸ்வரனுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தேனி அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+