இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் ஆளும் சந்திரிகா தலைமையிலான அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்ததையடுத்து நேற்றிரவுநாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான மக்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்தது.

இந்நிலையில் சந்திரிகா அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, எதிர்கட்சியான யுனைட்டெட் நேஷனல்பார்ட்டி கொண்டுவந்தது. அதுகுறித்த விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையில் கடந்த 2 நாட்களில் ஆளுங்கட்சியிலிருந்து 12 எம்.பிக்கள் விலகி, எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர்.இவர்களில் 4 பேர் சந்திரிகா அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்து, பிறகு பதவி பறிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மொத்தம் 225 உறுப்பிணர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 119 பேர் சந்திரிகா அரசுக்கு ஆதரவுஅளித்துவந்தனர். இவர்களில் 12 பேர் விலகவே, கட்சியின் பலம் 107ஆகக் குறைந்தது.

இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றிபெற முடியாது என்று அறிந்த அதிபர் சந்திரிகா, நேற்றிரவுநாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.

மேலும் வரும் டிசம்பர் 5ம் தேதி நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+