உள்ளாட்சித் தேர்தல் - சென்னையில் 12,000 போலீசார் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 12,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று சென்னை போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.

தமிழகத்தில் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

சென்னையில் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துமுத்துக்கருப்பன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு நாளன்று சென்னை நகர் முழுவதும் 12,000 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவர்களைத் தவிர அதிரடிப்படையினர் 45 குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் மொத்தம் 120 பகுதிகளில் உள்ள 210 பூத்துகள் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என்றுஅடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன்கள், பேஜர்கள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகளை எடுத்துச்செல்லதடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+