ஓசூரில் சாலை மறியல் செய்த திமுக எம்.பி. உட்பட 11 பேர் கைது
ஓசூர்:
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.மேலும் வெற்றிச் செல்வன் எம்.பி. உள்ளிட்ட 11 பேரை கைதுசெய்தனர்.
ஓசூர் நகராட்சித் தலைவர் பதவிக் திமுக சார்பில் போட்டியிடும் நாகராஜ் என்பவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யகிருஷ்ணகிரி திமுக எம்.பி. வெற்றிச் செல்வன் நேற்று (வியாழக்கிழமை) ஓசூர் வந்தார்.
அப்போது திமுக பிரச்சார வேன் ஒன்று நடுரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறுஏற்படுத்துவதாகக் கூறி, அந்த வேனை ஓசூர் ஏ.எஸ்.பி.அவிபிரகாஷ் சின்ஹா போலீஸ் ஸ்டேசனுக்கு எடுத்துச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெற்றிச்செல்வன் ஏ.எஸ்.பியிடம் பேசி பிரச்சார வாகனத்தை விடுவிக்க வேண்டும்என்று கூறினார். ஆனால் அதற்கு ஏ.எஸ்.பி.மறுத்துவிட்டார்.
இதனால் வெறுப்படைந்த திமுகவினர் வெற்றிச் செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏ.எஸ்.பி., ஒருபெரும் போலீஸ் படையுடன் வந்து தேசிய நெடுஞ்சாலை என்பதால்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் சாலை மறியலைக் கைவிடும்படியும் கேட்டுக்கொண்டார்.ஆனால் அவர்கள் கைவிட மறுத்துவிட்டனர்.
பிறகு போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் மீது தடியடி நடத்தினர். மேலும் வெற்றிச் செல்வன் எம்.பி.,நாகராஜ் உள்ளிட்ட 11 பேரை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்துக்குச்சென்றுவிட்டனர்.
பின்னர் இரவு 9.45 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications