ஆப்கான் போரில் இந்தியா பங்கேற்காது - ஜஸ்வந்த்
டெல்லி:
ஆப்கானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போரில் இந்தியா பங்கேற்காது என்று மத்திய வெளியுறவு மற்றும்ராணுவத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஆப்கான் மக்களுக்கு இந்தியா சார்பில் 10 லட்சம் டன் கோதுமை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மேலும்கூடாரங்கள், கம்பளி, போர்வை போன்றவையும் வழங்கப்படும்.
இதுதவிர இந்தியாவுக்கு வரவிரும்பும் இந்து, சீக்கிய மதத்தினருக்கு உடனுக்குடன் விசா வழங்கும்படிபாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
ஆப்கானில் பல்வேறு இனத்தவரும் சேர்ந்த பொதுவான அர அமைவதை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால்நார்தர்ன் அல்லயன்சுக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது என்று பாகிஸ்தான் நம்முடன் பேசவிரும்புகிறது.
ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி கவிழ்வதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்புதலிபான்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 ஹெலிகாப்டர்களை மீண்டும் அவர்களிடமே வழங்கிவிட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கான் மீது அமெரிக்கா நடத்திவரும் போரில் இந்தியா பங்கேற்காது. மேலும் எதிர்காலத்திலும் பங்கேற்கவாய்ப்பும் இல்லை. ஆப்கானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களைக் கண்டறிந்து அமெரிக்கப் படைகள்அவற்றை அழித்துவருகின்றன. இது இந்தியாவுக்கு நல்லது.
மேலும் இப்போதைக்கு நான் பாகிஸ்தான் செல்லும் திட்டம் இல்லை என்று கூறினார் ஜஸ்வந்த் சிங்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications