ஓட்டுக்காக சாராயம் காய்ச்சிய வேட்பாளர்!!
திண்டுக்கல்:
தனக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு பரிசாகத் தருவதற்காக சாராயம் காய்ச்சிய சுயேச்சை வேட்பாளர் கைதுசெய்யப்பட்டார்.
திண்டுக்கல் மடாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ளது சிக்கமநாயக்கன்பட்டி கிராமம். இங்கு வார்டு கவுன்சிலர்பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் ஆறுமுக சாமி.
கூலித் தொழிலாளியான இவரால் தனக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இணையாக செலவழிக்கபணம் இல்லை. மற்ற வேட்பாளர்கள் சேலை, வேட்டி, குடம் என்று கொடுக்கும் போது ஆறுமுகச் சாமியால் எதுவும்பரிசு தரமுடியாத நிலை. பார்த்தார் ஆறுமுகச்சாமி வாக்காளர்களைக் கவர சாராயம் தான் ஒரே வழி என்று நினைத்துஅதைக் காய்ச்ச முடிவு செய்தார்.
இதற்காக ஒரு மறைவிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு வைத்து சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த மதுவிலக்குப் போலீசார் ஆறுமுகச்சாமி சாராயம் காய்ச்சும் இடத்திற்கு விரைந்துவந்தனர். ஆனால் அவர் எப்படியோ தகவலறிந்து தப்பிவிட்டார். பிறகு போலீசார் அங்கிருந்த பானை மற்றும்சாராயம் காய்ச்சத் தேவையான பொருட்களை உடைத்தனர்.
பிறகு ஆறுமுக சாமியும் போலீசிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது தான்வாக்காளர்களைக் கவர அவர் இந்த முயற்சியில் இறங்கியது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications