பாகிஸ்தானில் விமானப் படைத் தளம் அருகே வன்முறை
ஜகோபாபாத் (பாகிஸ்தான்):
பாகிஸ்தானின் ஜகோபாபாத் விமானப் படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் வந்திறங்கியதையடுத்து அந்நகரில் பெரும் வன்முறை வெடித்தது.
அமெரிக்கப் படைகளின் வருகையை எதிர்த்து இந்த விமானப் படைத் தளத்தின் அருகே ஆயிரக்கணக்கானபாகிஸ்தானியர்கள் கூடினர். அவர்கள் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராகவும் பின்லேடனுக்கு ஆதரவாகவும்கோஷங்கள் எழுப்பினர்.
ஜமாத்-ஏ-உலமா அமைப்பு இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இங்கு கூடிய போராட்டக்காரர்கள்விமானப் படைத் தளத்துக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும்மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.ஒருவர் கொல்லப்பட்டார். சில போராட்டக்காரர்கள் போலீசார் மீது திருப்பிச் சுட்டனர். இதில் 3 போலீசார்காயமடைந்தனர்.
முன்னதாக இந்தப் போராட்டத்துக்கு வந்த 400 பேரை போலீசார் வழிகளிலேயே மடக்கி கைது செய்தனர்.
ஆனால், ஜமாத்-ஏ-உலமா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கபூர் கூறுகையில், கிட்டத்தட்ட 2,000 பேரைபோலீசார் கைது செய்துள்ளனர். தாடி வைத்திருந்தால் அவர்களை கைது செய்து விடுகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications