குழந்தையின் காலைக் கடித்துக் குதறிய குரங்கு
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்):
தொட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் குரங்கு கடித்துக் குதறிய பரபரப்பான சம்பவம்பாபநாசம் பகுதியில் நடந்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு,
பாபநாசம் அருகேயுள்ள ஈச்சங்குடி அக்ரகாரத்தில் வசித்துவருபவர் சந்திரமவுலி. குழந்தைகளுக்கு வேத பாடசாலைநடத்திவருகிறார். இவரது மனைவி கலா. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை விநாயக்.
சம்பவ நாளன்று குழந்தை வினாயக்கை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு கலா வெளியில் வேலைசெய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு வீட்டுக்குள் நுழைந்தது.
தொட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த குழந்தை வினாயக்கில் கால்களை கடித்துக் குதறியது. குழந்தையின்அலறல் சத்தம் கேட்ட பெற்றோரும், அருகில் உள்ளவர்களும் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது குழந்தையின் கால்கள் இரண்டும் குரங்கு கடித்ததால் ரத்த வெள்ளத்தில் இருந்தன.
அதிர்ந்து போன பெற்றோர்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைஒன்றில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு கால்களில் 7 தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்துவருகிறார்கள்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடி தஞ்சை மாவட்டக் கலெக்டரைச் சந்தித்து,ஈச்சங்குடி பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனுவைகொடுத்தார்கள்.
மனுவை ஏற்றுக்கொண்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications