மக்கள் பயமின்றி வாக்களிக்கலாம்: முத்துகருப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்புஏற்பாடுகளை செய்துள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று சென்னை நகரபோலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.

வரும் 16ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சிதேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடைபெறும் போது எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல்இருப்பதற்காக போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தேர்தலுக்காக செய்யப்ட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை நகர போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பதட்டமிக்கதாக கண்டறிப்பட்டுள்ள 55 இடங்களில் சிறப்பு அதிரடிபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தேனாம்பேட்டை, வண்ணாரப்பேட்டை,கீழ்பாக்கம் பகுதிகளிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவிலிருந்து 1 பட்டாலியன் குரூப் போலீசார் வந்துள்ளனர். அவகர்களும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே தேர்தலின்போது எந்த விதமானசட்டம், ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது. மக்கள் எந்த விதமான பயமும் இன்றிவாக்களிக்கச் செல்லலாம் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+