சேலம் அருகே பொதுமக்கள் புடைசூழ குரங்கின் உடல் தகனம்
சேலம்:
சேலம் பாப்பநாயக்கன்பட்டியில் மின் கம்பியில் சிக்கி இறந்த குரங்கிற்கு, மனிதர்களுக்கு நடத்துவதைப் போலஇறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன் பட்டியில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்துவருகின்றன.
அவற்றில் ஒரு குரங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மரக்கிளைக்களுக்கிடையில் தாவிக்குதித்து விளையாடும்போதுஅந்த வழியாகச் சென்ற மின்சாரக் கம்பிகளுக்குள் சிக்கிவிட்டது. சிறிது நேரத்திலேயே மின்சாரம் தாக்கியதால்அந்தக் குரங்கு உடல் கருகி இறந்து விட்டது.
இதைக்கண்ட அந்தக் கிராமத்துப் பொதுமக்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். மின் கம்பிகளுக்கிடையில்கருகிய நிலையில் இருந்த அந்தக் குரங்கின் உடலை அகற்றினார்கள்.
பிறகு அந்தக் குரங்கிற்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவதைப் போல இறுதிச் சடங்குகள் அனைத்தும் செய்து, உடலைஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications