பாவல் வருகை: பாகிஸ்தானில் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் காலின் பாவல் திங்கள்கிழமை (இன்று) பாகிஸ்தான் வரவிருப்பதைஎதிர்க்கும் பொருட்டு, பாகிஸ்தானில் உள்ள மதவாத அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்குவதை எதிர்த்து, பாகிஸ்தான் முழுவதும் கடந்த 8 நாட்களாக மதவாதிகள்ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் 10க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலின் பாவல் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கிறார். இவர் பாகிஸ்தானுக்குள் காலடிவைப்பதைக் கடுமையாக எதிர்க்கும் மதவாதிகள், பாகிஸ்தான் முழுவதும் உள்ள வணிகர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால், வணிகர்கள் இதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஏனென்றால், கடந்த ஒரு வாரமாக நடந்தவன்முறைச் சம்பவங்களின்போது, காரணமே இல்லாமல் இவர்களின் கடைகளையும் அடித்து நொறுக்கிசூறையாடியுள்ளனர் போராட்டக்காரர்கள்.

இதனால், இன்று பெரும்பாலும் கடைகளெல்லாம் திறந்தே இருந்தன. முக்கியமாக கராச்சியில் யாரும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்த மாதிரியே தெரியவில்லை. பெஷாவரிலும் இதே நிலைதான்.

குவெட்டா நகரிலும், நேற்று வன்முறை வெடித்த ஜகோபாபாத் நகரிலும் உள்ள கடைகள் மட்டும்மூடப்பட்டிருந்தன.

லாகூரில் இன்று ஏற்பட்ட வன்முறையில் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+