For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன மழைக்கு நடுவே கள்ள ஓட்டு மழை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன மழை பெய்து கொண்டிருக்கும் சென்னை நகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுசெவ்வாய்க்கிழமை (இன்று) காலை கொட்டும் மழைக்கு நடுவே துவங்கியது. இதில் கள்ள ஓட்டுப் போட அத்தனைஅரசியல்

கட்சிகளும் கச்சை கட்டி இறங்கியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்குத் துவங்கியது.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 4 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள்ஆகியவற்றில் தேர்தல் நடக்கிறது.

இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட அத்தனை க்கிய கட்சிகளும் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளன. கள்ளஓட்டுக்குத் தேவையான அத்தனை பணிகளையும் செவ்வனே செய்து முடித்து விட்டன இந்தக் கட்சிகள்.

தென் சென்னையில் கணிசமான இடங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கள்ள ஓட்டுப் போட அதிக பிரகர் கராத்தேதியாகராஜன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக பாரதீய ஜனதாக் கட்சியினர் அதிகமாக உள்ள மயிலாப்பூர் பகுதியில் இந்த முறை அவர்களுக்குவாக்குகள் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக

அதிகவினர் அதிக அளவில் கள்ள ஓட்டுப் போட ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இன்னொரு அதிமுக பிரமுகரான சேகர் பாபுவும் கள்ள ஓட்டுக்கான பல்வேறு ஏற்பாடுகளை வட சென்னையில்செய்து வைத்துள்ளாராம்.

மத்திய சென்னையைப் பொருத்தவரை மேயர் தேர்தலில் போட்டியிடும் பாலகங்காவுக்கு கணிசமான அளவில்கள்ள ஓட்டுக்கள் கிடைக்குமாம்.

திமுகவைப் பொருத்தவரை பெரிய அளவில் இந்த ஏற்பாடுகளில் இறங்காவிட்டாலும் கூட சைதாப்பேட்டை, வடசென்னையில் பல பகுதிகளில் கள்ள ஓட்டுக்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனராம். இதற்காக பல கல்யாண

மண்டபங்களில் தொண்டர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனராம்.

திராவிடக் கட்சிகளின் நிலை இவ்வாறிருக்க காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு கள்ள ஓட்டு கலாசாரத்தில் இறங்கிவிட்டது.

மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வசந்த குமார் தனக்கு சாதகமாக ஓரளவு ஓட்டுக்கள் கிடைக்கும் என்றுநம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவரது வெற்றிக்குப் பாதகமாக சில ஓட்டுக்கள் அமைந்து விடக் கூடாது என்பதால் வட சென்னைபகுதியில் காங்கிரஸார் கள்ள ஓட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கள்ள ஓட்டுப் போட இப்படிக் கட்சிகள் அவசரம் காட்டுவதற்கு முக்கியக் காரணம், இந்த மேயர் தேர்தலில்எப்படியும் ஸ்டாலினை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதுதான்.

தமிழகம் முழுவதிலும் நமக்கு சாதகமாக ஓட்டுக்கள் விழுந்தாலும் கூட சென்னையில் மட்டும் அது தலைகீழாகஇருப்பதால், இந்த முறை அதை முறித்துக் காட்ட வேண்டும் என்று அதிமுகவினர் தீவிர பிரசாரத்தில்இறங்கியுள்ளனர்.

இருப்பினும் கடைசி நேரத்தில் சென்னை வாக்காளர்கள் காலை வாறி விட்டால் என்ன செய்வது என்றபயத்தில்தான் கள்ள ஓட்டுக்குபல ஏற்பாடுகளை அதிமுக தரப்பு செய்து வைத்துள்ளதாம்.

மொத்தத்தில் சென்னை மேயர் தேர்தலில் கன மழைக்கு நடுவே பலத்த கள்ள ஓட்டு மழை பெய்யப் போகிறதுஎன்பது மட்டும் உறுதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X