முதல்கட்ட தேர்தலில் 60 சதவிகித வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகத்தில் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை (இன்று) நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவிகிதத்திற்கு மேல்வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
சென்னையில் காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு பிற்பகலின்போது சூடு பிடித்தது.
குறிப்பாக திமுகவினரின் பகுதிகள் என கருதப்படும் சைதாப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், திருவெற்றியூர்,அண்ணா நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்கள் கூட்டம்அதிகமாக இருந்தது.
பல பகுதிகளில் கலாட்டாக்களும், வன்முறைகளும் நடந்ததால், சென்னையில் பொதுவாக வாக்குப் பதிவுகுறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை அருகே உள்ள மீஞ்சூர்-காட்டுப்பள்ளி என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியைக்கைப்பற்ற 30 பேர் கொண்ட ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது.
ஆனால், அந்த வாக்குச் சாவடியின் தேர்தல் அதிகாரியும் பிற ஊழியர்களும் அதன் கதவுகளை மூடிவிட்டு பின்பக்கமாகச் சென்று தப்பி விட்டனர்.
சென்னை-அண்ணாநகரில் நடந்த ஒரு வன்முறைச் சம்பவத்தில் ஒருவருக்குக் கத்திக் குத்து விழுந்தது. அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் புரசைவாக்கம், ஜாபர்கான்பேட்டை, திருவான்மியூர், கோபாலபுரம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பரவலாககள்ள ஓட்டுப் போடுதல், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் ஆகியவை நடந்தன.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க வராததால், இங்கும் வாக்குப் பதிவுகுறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications