தலைவிரித்தாடியது வன்முறை: வாக்குச் சாவடிகள் சூறை
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் மாநிலம் முழுவதும் வன்முறையும், கள்ள ஓட்டுப்போடுவதும் நடந்துள்ளது.
சென்னையில் தான் மிக பயங்கர மோதல்கள் நடந்தன. திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மிகபெரிய சண்டைகள் நடந்தன.
நூற்றுக்கணக்கான இடங்களில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், மிரட்டுதல், அடிதடி, துப்பாக்கிச் சூடு,அரிவாள் வீச்சு, வாக்குச் சீட்டுகளைப் பறித்தல் ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், 8 வழக்குகள் மட்டுமேபோலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இதில் போலீசாரும் அடங்குவர். பல இடங்களில்வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவான வாக்குப் பதிவு தான் நடந்துள்ளது. இங்கு வெறும் 35சதவீதம் தான் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கலவரக் கும்பல்களும் போலீசாரின்கையாலாகத்தனமும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் திமுகவினரும் அதிமுகவினரும் பயங்கரமாக மோதிக் கொளவதாக வந்த செய்திகளையடுத்துபெரும்பாலான மக்கள் வாக்களிக்க வரவேயில்லை.
சென்னை தவிர பிற இடங்களில் நடந்த தேர்தலில் ஜாதி மிக முக்கிய பங்கு வகித்தது. பெரும்பாலான மோதல்கள்ஜாதி அடிப்படையில் தான் நடந்தன.
அரியலூரில் முல்லையூர் கிராமப் பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் வாக்குச் சாவடிக்கு தீ வைக்கப்பட்டது. இங்குசுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜமாணிக்கம் என்பவரது மகன் தனது தந்தைக்கு யாருமே ஓட்டுப் போடவில்லைஎன்பதால் வெறுத்துப் போய் தனது கூட்டாளிகளுடன் சென்று வாக்குச் சாவடிக்கு தீ வைத்தார்.
விருதுநகரில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குப் போனது. இங்கு வீரசோழன்கோட்டையில் இரு பெண்வேட்பாளர்களின் ஆட்களும் கத்தி, அரிவாளுடன் சண்டை போட்டு ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள்அல்ல என்பதை நிரூபித்தனர்.
மதுரை பாலமேட்டில் நடந்த வாக்குப் பதிவில் கலவரம் மூண்டது. இரு கிராமத்தினர் மோதிக் கொண்டனர். இதில்30 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தொப்பாம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் திமுக-அதிமுகசண்டை நடந்தது. வாக்குச் சாவடிக்குள்ளேயே ஒருவரின் வேட்டியை ஒருவர் அவிழ்த்து நிர்வாணச் சண்டைபோட்டனர் இரு கட்சியினரும்.
விருதுநகர் தவிர சென்னை அருகே பொன்னேரியிலும் கும்மிடிப்பூண்டியிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் வன்முறைக் கும்பலைக் கலைக்க முடிந்தது.
முதல்வர் பன்னீர் செல்வத்தின் தொகுதியான பெரியகுளத்தில் அதிமுகவினர் வெறியாட்டம் போட்டனர். இங்குஜெயமங்கலம் என்ற இடத்தில் கள்ள ஓட்டு போட வந்த கும்பலை தேர்தல் அதிகாரி தடுத்தார். அவருக்கு தர்ம அடிகொடுத்தனர் அதிமுகவினர்.
பல இடங்களில் நடந்த சண்டைகள் ஜாதிச் சண்டைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications