பாண்டிச்சேரி: காங்கிரசுக்கு கண்ணன் ஆதரவு- சண்முகம் விரைவில் ராஜினாமா
பாண்டிச்சேரி:
6 மாதத்துக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகவிட்டால் பதவி போய்விடும் என்ற நிலையில் அல்லாடிக்கொண்டிருக்கும் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகத்துக்கு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
அவரது காங்கிரஸ் கட்சியில் எந்த எம்.எல்.ஏவும் ராஜினாமா செய்ய முன் வராததால் இவர் எம்.எல்.ஏ. தேர்தலில்போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சண்முகத்தின் தீவிர எதிர்ப்பாளரான பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் தலைவர் கண்ணன் காங்கிரஸ்கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். இது சண்முகத்துக்கு கட்சியில் மேலும் சிக்கலைஉருவாக்கியுள்ளது.
முதல்வர் சண்முகம் வரும் நவம்பர் 13ம் தேதிக்குள் எம்.எல்.ஏவாக வேண்டும். இந்நிலையில் 2 எம்.எல்.ஏக்கள்ராஜினாமா செய்துவிட்டு, தங்கள் தொகுதிகளை சண்முகம் போட்டியிடுவதற்காக விட்டுக்கொடுக்க முன்வந்தார்கள்.
இதில் ஏதாவது ஒரு தொகுதியில் சண்முகம் போட்டியிட முடிவும் செய்திருந்தார். இதற்கிடையில் தற்போது அந்த 2எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.
இந் நிலையில் மாநில காங்கிரஸ் விவகாரத்தை காங்கிரஸ் மத்தியத் தலைமை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
சோனியா காந்தியின் தூதர்களாக டெல்லியில் இருந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் குலாம் நபி ஆசாத்தும்,ரமேஷ் சென்னிதாலாவும் பாண்டிச்சேரி வந்துள்ளனர். இவர்கள் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் தலைவர்கண்ணனை சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து யார் முதல்வராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்க கண்ணண்முன்வந்துள்ளார். 30 பேர் கொண்ட பாண்டிச் சேரி சட்டசபையில் இவரது கட்சிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர்.மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் இவருக்கு ஆதரவாக உள்ளனர்.
முதல்வர் பதவியிலிருந்து சண்முகத்தை நீக்கினால் அதை எதிர்த்து அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெறவும்வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கண்ணனின் ஆதரவைப் பெற்றுவிட்டதன் மூலம் அதிமுக ஆதரவு இல்லாமலேயே காங்கிரஸ் கட்சிஅங்கு ஆட்சியைத் தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சண்முகத்தை முதல்வராக்கியதால் தான் 11 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ் பிளவுபடாமல்தப்பியது. இவர் எந்த கோஷ்டியையும் சேராதவர். இவரை நீக்கிவிட்டு வேறு எந்த எம்.எல்.ஏவையாவதுமுதல்வராக்கினால் கட்சி நிச்சயம் உடையும என குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கருதுகின்றனர்.
இதனால் யாராவது ஒரு எம்.எல்.ஏவை ராஜினாமா செய்ய வைத்து சண்முகத்தைத் தேர்தலில் போட்டியிட வைக்கஅவர் இன்னும் முயன்று கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் அவரை நீக்கினாலும் ஆட்சிக்கு பிரச்சனை வந்துவிடாமல் தடுக்க கண்ணனையும் கட்சிக்குள்வளைத்துப் போட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications