எத்தனை தடவை ஓட்டு போட்றது! மறுவாக்குப் பதிவை புறக்கணிக்கும் மக்கள்
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இன்று நடந்த மறுவாக்குப் பதிவை அந்தக் கிராமப் பொதுமக்கள்புறக்கணித்தனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில்18ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டவாக்குப் பதிவு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 18ம் தேதியன்று திருத்தணி அருகே உள்ள தும்பிக்குளம் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குதேர்தல் நடத்தப்பட்டது.
அப்போது கள்ள ஓட்டுப் போட ஒரு கும்பல் முயன்று, அதை மற்றொரு கும்பல் தடுத்து நிறுத்த முயன்றதால் கலவரம்வெடித்தது. வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. இதனால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு தும்பிக்குளம் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் மறுவாக்குப் பதிவிற்கானஏற்பாடுகளைச் செய்து வைத்து பொதுமக்களின் வருகைக்காகத் தயாராகக் காத்திருந்தார்கள்.
ஆனால் காலையிலிருந்து இதுவரை ஒருவர் கூட வாக்குச்சாவடிப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டதற்கு, தேவையில்லாமல் வன்முறையை ஏற்படுத்தி அமைதியைக் குலைத்தனர்.அந்த வன்முறையை போலீசால் தடுக்க முடியவில்லை. இப்போது மீண்டும் தேர்தல் நடத்துவதாகக் கூறுகிறார்கள்.ஒரு தேர்தலுக்கு எத்தனை தடவை வாக்களிப்பது என்றனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்டக் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தும்பிக்குளம் விரைந்து,பொதுமக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சமாதானப் பேச்சு நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications