வாக்கு எண்ணிக்கை: தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
வாக்கு எண்ணிக்கையின் போது தொடர்ந்து வீடியோ படம் எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் பிரமுகர்தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீரித்து இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் தக்க உத்தரவை தேர்தல் கமிஷன்பிறப்பிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பிரிவுத் தலைவர் சூர்யப்பிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியினர் ரவுடிகளின் துணையுடன் பல இடங்களில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றியுள்ளனர்.
பல இடங்களில் வாக்காளர்களைத் துரத்திவிட்டு, கள்ள ஓட்டுக்களைப் போட்டனர். சுதந்திரமாக இந்தத் தேர்தல்நடைபெறவில்லை. இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும்.
மேலும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல்போலீஸ் பாதுகாப்புப் போடவேண்டும். எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் தொடர்ந்து வீடியோ படம் எடுக்கதேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் முறையிட்டும் இன்னும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேர்தல்கமிஷன் உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்ட உத்தரவிட வேண்டும். இவ்வாறுஅந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்து மனு ஐகோர்ட் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
மனுதாரர் தேர்தல் கமிஷனிடம் கொடுத்த மனுவை உடனடியாகப் பரிசீலித்து, இன்று மாலைக்குள் தக்க கமிஷன்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications