பாண்டிச்சேரி: அதிமுக, த.மா.காவுக்கு காங்கிரஸ் டாடா
பாண்டிச் சேரி:
புதுவையில் காங்கிரஸ் கட்சி அதிமுகவையும் தமிழ் மாநில காங்கிரசையும் கூட்டணியிலிருந்து விலக்கியுள்ளது.
பாண்டிச்சேரியில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி புதுவை துணை நிலைய ஆளுநர் ரஜினி ராயிடம், புதியமுதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட ரங்கசாமி, தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியலைக் கொடுத்தார்.
இதில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 11 பேர், புதுவை மக்கள் காங்கிரஸ் (கண்ணனின் கட்சி) உறுப்பினர்கள் 4 பேர்மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆகிய 17 பேரின் பெயர்கள் தான் இடம்பெற்றிருந்தனர்.
இதற்கு முன்பு சண்முகம் தலைமையிலான அமைச்சரவைக்கு ஆதரவு தெரிவித்திருந்த அதிமுக, த.மா.கா. ஆகியகட்சிகளின் உறுப்பினர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
இந்த முறை புதுவை மக்கள் காங்கிரஸ் ஆதரவு இருப்பதால் அதிமுக மற்றும் த.மா.கா. ஆகிய கட்சிகளின் ஆதரவுகாங்கிரசுக்குத் தேவைப்படவில்லை. அதனால் அவர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications