மறுவாக்குப் பதிவிலும் வன்முறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட 193 இடங்களிலும் இன்று தேர்தல் மீண்டும் நடக்கிறது. இந்தத் மறுவாக்குப் பதிவிலும்ஆங்காங்கே வன்முறை நடந்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில்18ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 193 இடங்களில் மறுவாக்குப்பதிவுசனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. சென்னையில் ஆவடி, அம்பத்தூர் ஆகியநகராட்சிகளில் உள்ள இடங்களில் மறுவாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் வன்முறை:

சென்னை ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13 இடங்களில் மறுவாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்த நகராட்சிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் 27- வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் பாரதிய ஜனதாக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வசந்தி என்ற வேட்பாளர் அதிமுகவினரால் தாக்கப்பட்டார். அவரது வீட்டுக்குள்நுழைந்த அதிமுகவினர் அவரையும் அவரது கணவரையும் தாக்கினர்.

பின்னர் அவரது எதிர்த்த வீட்டுக்காரருக்கும் அடி விழுந்தது. இனிமேல் தேர்தலில் நின்றால் மண்டையைஉடைப்போம் என மிரட்டினர்.

மேலும் 40-வது வார்டில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பஞ்சாட்சரமும் தாக்கப்பட்டுள்ளார். அவர்பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்ற பகுதிகளில் மறுவாக்குப் பதிவு பொதுவாக அமைதியாகவே நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+