புதிய நீதிக் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமீபத்தில் முளைத்த ஜாதிக் கட்சிகளில் முதல் முறையாக புதிய நீதிக் கட்சி மட்டுமே மக்கள் பிரதிநிதியைப்பெற்றுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல ஜாதிக் கட்சிகள் முளைத்தன. அவற்றில் மக்கள் தமிழ் தேசம்,புதிய நீதிக் கட்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஜாதிக் கட்சிகளுக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில்படுதோல்வி கிடைத்தது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன.இவற்றில் புதிய நீதிக் கட்சிக்கு மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
ஆரணி நகராட்சித் தலைவர் பதவியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் வி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
ஆனால் நகராட்சி வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications