ஆந்த்ராக்ஸ் அபாயம் .. நீலகிரியில் சிறப்பு முகாம்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளஆடுகள் மூலம் ஆந்த்ராக்ஸ் பரவும் அபாயம் உள்ளதால் மாவட்டத்தில் சிறப்புகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கையில்,
மாவட்டத்திலுள்ள 21 இடங்களில் ஆந்த்ராக்ஸ் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தங்களது ஆடுகளைக் கொண்டு வந்து இங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம்.
ஆந்த்ராக்ஸ் இதுவரை தமிழகத்தில் எங்கும் இல்லை. எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications