தேர்தல் முறைகேடு: அதிகாரிகளை அழைத்து கவர்னர் தீவிர விசாரணை
டெல்லி:
உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்று திமுக சார்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தமிழகதலைமைச் செயலாளர் மற்றும் தேர்தல் கமிஷனர் ஆகியோரிடம் கவர்னர் ரங்கராஜன் விசாரணை நடத்தினார்.
சென்னை மறறும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவுநடைபெறும்போதும், வாக் எண்ணிக்கையின் போதும் அதிமுகவினர் முறைகேடு செய்ததாக திமுக சார்பில் மத்தியஅரசுக்ம், கவர்னருக்கும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் சென்னை மேயர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் அதிமுகவினர் முறைகேடு செய்ததாகவும், ஸ்டாலின்தோற்றுவிட்டார் என்று அறிவிக்க அவர்கள் அதிகாரிகளை வற்புறுத்தியதாகவும் திமுக சார்பில் கவர்னரிடம் மனுகொடுக்கப்பட்டது. பிறகு கவர்னர் தலையிட்டதால் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டதாககூறப்படுகிறது.
இந்நிலையில் கவர்னர் தமிழக தலைமைச் செயலாளரையும், தேர்தல் கமிஷனரையும் தன்னை வந்து சந்திக்கு ாறுஉத்தரவிட்டார். இதையடுத்து தேர்தல் அதிகாரி பாண்டியன் நேற்று முன்தினம் கவர்னரைச் சந்தித்தார். அவரிடம்தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கவர்னர் விசாரணை செய்தார் என்று கூறப்படுகிறது.
மேலும் திமுக தரப்பில் கூறப்பட்டள்ள புகார்களுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும்கேட்டறிந்தார். மேலும் தன்னிடம் உள்ள புகார்களையும் தேர்தல் கமிஷனரிடம் கொடுத்து அதற்கு விரிவானவிளக்கம் அளித்து அறிக்கை கொடுக்குமாறும் கவர்னர் கேட்டுக்கொண்டார்.
இதேபோல தலைமைச் செயலாளர் சங்கரும் கவர்னரைச் சந்தித்தார். ஆனால் இவர் அளித்த விளங்கங்களால்கவர்னர் திருப்தி அடையவில்லை என்ற கூறப்படுகிறது.
மேலும், நன்றாக விசாரணை செய்து சரியான விளக்கங்களுடன் அறிக்கை அளிக்குமாறு சங்கரிடம் கவர்னர்கேட்டுக்கொண்டார்.
இந்த 2 அதிகாரிகளின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து, தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தனக்குக்கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்ககவர்னர் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications