கருணாநிதிக்கு மனப் பக்குவம் இல்லையே: வருத்தப்படுகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருணாநிதி சொல்வதைப் போல என்னுடைய போயஸ் தோட்ட இல்லத்தில் எந்தசதி ஆலோசனையும் நடத்தவில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடத்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவினர் சதி ஆலோசனைசெய்தததாக திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.

இதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை)சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு முதன்மை நிலையை வழங்கி இருப்பதைப்பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி அதிமுக மீது பல குற்றச்சாட்டுக்களைக் கூறிவருகிறார்.

வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன என்றும், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றது என்றும்,வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்றும் தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருக்கிறார்.

மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேராக உள்ள உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகளுக்கு, அவை வெற்றிஆயினும் சரி, அல்லது தோல்வி ஆயினும் சரி அதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றமனப்பக்குவம் அற்றவராக கருணாநிதி இருக்கிறார்.

கருணாநிதி தற்போது நிதானமிழந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். எடுத்துக் காட்டாக சென்னைமேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதிமுக வேட்பாளர் முன்னணியில்இருக்கிறார் என்றவுடன், ஆளுங்கட்சியினர் அராஜகம், வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்றுஅதிமுகவினர் மீது சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.

பிறகு அடுத்த நாள் அவரது மகன் ஸ்டாலின் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன், ஜனநாயக அகல் விளக்குஏற்றப்பட்டது என்று பத்திரிக்கைகளில் கால் பக்க அளவிற்கு விளம்பரம் கொடுத்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடத்த அதிமுகவினர், போலீசாருடன் சேர்ந்து சதித்திட்டம்தீட்டியதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கூறிவருகிறார்.

என்னுடைய போயஸ் தோட்ட இல்லத்தில் எந்த சதி ஆலோசனையும் நடைபெறவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்மீது இத்தகைய பொய் பிரச்சாரத்தில் கருணாநிதி மீண்டும் ஈடுபட்டால் கழக உடன்பிறப்புக்கள் ஒருபோதும்சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+