அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: ஜி.கே.வாசன்
சென்னை:
அதிமுகவுடனான கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே வாசன்தெரிவித்துள்ளார்.
வாசன் நேற்று (புதன்கிழமை) சென்னையில் நிருபர்களின் கேள்விகளுக்குபதிலளித்தார்.உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளதால்அவர்களுடன் தமாகா இணைந்து பலமான அணி அமைக்குமா என்று நிருபர்கள் கேள்விஎழுப்பியபோது, எங்கள் பலத்தின்படி நாங்கள் நடப்போம் என்று பதிலளித்தார் வாசன்.
அவர் மேலும் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை.தேர்தல் பிரச்சாரமும், சுற்றுப்பயணமும் எனக்கு புதிதல்ல . முப்பானார் அவர்களுடன்இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். பல முறை தனியாகவும் பிரச்சாரம்செய்துள்ளேன். எனவே இந்த முறை நான் தனியாக தேர்தல் பிரச்சாரம் செய்யததில் எனக்குபுதிய அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த தேர்தலை பொறுத்தவரை கடந்த தேர்தலைவிட குறைவான இடங்களில்தான் நாங்கள்போட்டியிட்டோம். அதனால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
மேலும் இது எம்.எல்.ஏ. தேர்தலோ அல்லது எம்.பி. தேர்தலோ அல்ல. உள்ளூர்பிரச்சனைகளை வைத்து நடந்த தேர்தல் அதற்கேற்பதான் தேர்தல் முடிவுகள் இருக்கும்.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இழப்பு ஏற்பட்டது என்று கூற முடியாது.
எல்லா கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புதான் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு மக்களிடம் உள்ள ஆதரவை வெளிப்படுத்தும்விதமாகத்தான் அமைந்துள்ளது. அதிகமுவுடான எங்கள் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்.
தேர்தலின் போது வன்முறை நடந்ததாக எல்லா கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. இதுவழக்கமானதுதான். இது குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்.
நகராட்சி தலைவர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். கவுன்சிலர்கள்குறைவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு, மூன்று மாநகராட்சிகளில் கூடகவுன்சிலர்கள் குறைவாகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமாகாவின் செயல்பாடை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications