வேலூர்: மருமகனை தீ வைத்து எரித்த மாமனார்
வேலூர்:
மாமனார் வீட்டுக்கு வர மறுத்த மருமகனை மாமனாரே உயிருடன் எரித்தார். இதையடுத்து அவரைப் போலீசார்தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த தம்பதிகள் அய்யப்பன்,புவனேஸ்வரி. அய்யப்பன் ஆம்பூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். புவனேஸ்வரி அங்குள்ளதோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவரும் புவனேஸ்வரியின் தந்தையான நாமதேவனின் வீட்டில் வசித்து வருகிறார்கள். இதுஅய்யப்பனுக்குப் பிடிக்கவில்லை.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக தனது சொந்த ஊரான தேவலாபுரத்துக்குஅயயப்பனும், புவனேஸ்வரியும் சென்றனர். அப்படியே அங்கேயே இருந்துவிட்டனர்.
2 நாட்கள் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததால் கடந்த 19ம் தேதி நாமதேவன் தனது மகளையும், மருமகனையும்தேடி தேவலாபுரத்துக்கு வந்து, அய்யப்பனை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அதற்கு அய்யப்பன்மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாமதேவன் தனது மகள் புவனேஸ்வரியை வெளியில் போகச் சொல்லிவிட்டு,வீட்டுக்குள் வைத்தபடி அய்யப்பன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார்.
இதில் படுகாயம் அடைந்த அய்யப்பனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எடுத்துச் சென்று ஆம்பூர் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாமதேவனைத் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications