இந்துக்கள் மீது தாக்குதல்: பிரதமரின் தூதர் டாக்கா விரைவு
டெல்லி:
வங்கதேசத்தில் கலிதா ஜியா தலைமையில் புதிய அரசு பதவியேற்றதில் இருந்து அந்நாட்டில் இந்துக்கள் மீதுதாக்குதல்கள் நடக்க ஆரம்பித்துள்ளது குறித்துப் பேச பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ்மிஸ்ரா வங்கதேசம் விரைகிறார்.
அவர் இன்று டாக்கா செல்கிறார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் இந்திய ஆதரவாளரான ஷேக் ஹசீனாவின் கட்சி தோல்வியடைந்து கலிதா ஜியாதலைமையிலான ஆட்சி பதவிக்கு வந்தது.
இந்த ஆட்சி பதவியேற்றதில் இருந்து இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. பல இந்துப்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிராமத்தில் கலிதா ஜியாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் நுழைந்து இந்துப்பெண்ணையும் அவரது மகளையும் ஒரே அறையில் வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தவிர பல இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு வருகின்றன. கற்பழிப்பு, கொலைகள்சாதாரணமாகிவிட்டன. இதனால், அங்கிருந்து பல இந்துக் குடும்பங்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகஆரம்பித்துள்ளனர்.
நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் தனது பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவை வாஜ்பாய்வங்கதேசம் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
இன்று டாக்கா வரும் அவர் பிரதமர் கலிதா ஜியாவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ருதுஸாசெளத்ரியையும் சந்தித்துப் பேசுவார். பிரதமரின் வாழ்த்துக் கடிதத்தையும் அவர் கலிதாவிடம் வழங்குவார்.பின்னர் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதிப்பார்.
இந்தியத் தூதரிடம் வங்கதேசம் கண்டனம்:
இந் நிலையில் டெல்லியில் வங்கதேச தூதரகத்தின் முன் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்தியபோராட்டத்தைக் அந் நாட்டு அரசு கண்டித்துள்ளது.
வங்கதேசத்துக்கான இந்தியத் தூதர் மணிலால் திரிபாதியை அந் நாட்டு அரசு அழைத்து தனது கண்டனத்தைத்தெரிவித்துள்ளது.
வங்கதேசக் கொடி எரிக்கப்பட்டதை அந் நாடு மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications