சென்னை-கோலாலம்பூர் இடையே நாளை முதல் தினமும் விமானம்:இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சென்னை- கோலாலம்பூர் இடையே தினந்தோறும் விமானங்களை இயக்கஇந்தியன் ஏர்லைன்ஸ் திட்டமிள்ளது.
இது குறித்து இந்தியன் ஏர்லைன்சின் தென் மண்டல அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
பெங்களூரில் இருந்து சிங்கப்பூருக்கு இப்போது வாரம் 3 விமானங்கள் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இனி 5விமானங்கள் இயக்கப்படும்.
ஹைதராபாத்திலிருந்து பேங்காக்குக்கு பெங்களூர், சென்னை வழியே வாரம் இரு விமானங்கள் இயக்கப்படும்.
திருவனந்தபுரத்திலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேக்கு தினமும் விமானங்கள் இயக்கப்படும். இப்போது வாரம் 5விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல கொச்சியிலிருந்த டெல்லிக்கு மும்பை வழியாக தினமும் விமானங்கள் இயக்கப்படும். இதில் மாலைநேர விமானமும் அடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications