தமிழகத்தில் பலத்த மழைக்கு 12 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைபெய்து வருகிறது.
குறிப்பாக வட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது.
வட கிழக்கு பருவ மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதில் நெல்லை மாவட்டம் தச்சநல்லூர்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மின்னல் தாக்கி இறந்தனர். இதுதவிர கோவை, பல்லடம், ஈரோடு ஆகிய பகுதிகளிலும்மழைக்குப் சிலர் பலியாகியுள்ளனர்.
இந்த மழை மேலும் 36 மணி நிேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வட மாவட்டங்கள்மற்றும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை நீடிக்கும்:
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு முழுவதிலும் தூறல் நீடித்தது. நகரின்தாழ்வான பகுதிகள் தொடர்ந்து மழை நீரில் மூழ்கியுள்ளன.
வேளச்சேரியில் மழை நீர் சூழ்ந்துள்ள கைவேலி பகுதியில், தெர்மகூல் அட்டைகளை படகுகள் போலப் பயன்படுத்தி போக்குவரத்தில்ஈடுபட்டுள்ளனர் அப்பகுதி பொதுமக்கள். இந்தப் பகுதி ஆக்கிரமிப்புப் பகுதி என்பதால் அரசுத் தரப்பில் எந்தவித சாலை வசதியும், மின்சாரவசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications