மழை காரணமாக மதுரை ரயில்கள் தாமதம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கன மழை காரணமாக ரயில் பாதைகள் பாதிப்படைந்துள்ளதால் மதுரைக்கு வரும் ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே வந்துகொண்டுள்ளதாக மதுரை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை முதல் மதுரை வரையிலான ரயில் பாதையில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் பாதைகளில் ரயில்கள் மிகவும்மெதுவாக வர நேரிட்டுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை காலை வழக்கமான நேரத்திற்கு வர வேண்டிய ரயில்கள் அனைத்தும் சுமார்அரை மணி நேரம் தாமதமாகவே வந்து சேர்ந்தன.
பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications