சுவாரஸ்யமான கட்டத்தில் மதுரை துணை மேயர் தேர்தல்
மதுரை:
மதுரை மாநகராட்சியில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு 36 கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதாககூறி வருவதால் மதுரை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான தேர்தல் சுவாரஸ்யமான கட்டத்தைஅடைந்துள்ளது.
மேலும் துணை மேயர் தேர்தலில் மேயர் வாக்களிக்கு முடியுமா என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது.
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. துணைமேயருக்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெறவுள்ளது.
மதுரை மாநகராட்சியிலுள்ள கவுன்சிலர்களின் மொத்த எண்ணிக்கை 72. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமேதங்களுக்கு 36 கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருவதால் துணை மேயர் தேர்தல் சுவாரஸ்யமானகட்டத்தை அடைந்துள்ளது.
சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது முதல்வர் வாக்களிக்கலாம். ஆனால் மாநகராட்சியில் வாக்கெடுப்புநடந்தால் மேயர் வாக்களிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது இரு கட்சியினருமே தங்களுக்க சமமான ஆதரவு உள்ளது என்று கூறுவது உண்மையானால் துணைமேயர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்நிலையில் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு பணம் கொடுப்பதாகவும், பதவி கொடுப்பதகாவும் இரு கட்சியனரும்கூறி அவர்களை விலை பேசி வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications