தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றத்தைத் தடுத்த பாஜக
சென்னை:
காஞ்சிபுரம் அருகே உள்ள கூத்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதைபாரதீய ஜனதாக் கட்சி தடுத்து நிறுத்தியது.
காஞ்சிபுரம் அருகே உள்ளது கூத்திரம்பாக்கம் கிராமம். இங்கு தாழ்த்தப்பட்ட சமூக மக்களை மேல் ஜாதியினர் கொடுமைப்படுத்திவருகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட மேல் ஜாதி சமூகத்தவர்களால் பறிக்கப்பட்டுள்ளன. இது குறித்துபாதிக்கப்பட்டுள்ள அக்கிராம தாழ்த்தப்பட்டவர்கள் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால், கலெக்டர் அலுவலகம் தூங்கி வருகிறது.
தங்களுக்கென எந்தவித அடிப்படை வசதியும் இல்லை, கோவில் திருவிழாக்களின்போது சாமி ஊர்வலம் தங்களது பகுதிக்குள்வருவதை ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை, தாழ்த்தப்பட்டவர்களின் பிணத்தைக் கூட தங்களது பகுதி வழியாக எடுத்துச்செல்ல ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்று பலமுறை அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் அரசு சார்பில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் கடை கட்டித் தருவதாகவும், இதற்கான இடத்தில்அஸ்திவாரம் கட்டித் தருமாறும் அதிகாரிகள் தாழ்த்தப்பட்டவர்களிடம் கூறினர்.
மிகுந்த மகிழ்ச்சியடைந்த அந்த ஏழைகள் குருவி சேர்ப்பது மாதிரி சேர்த்து வைத்த தங்கள சொந்தப் பணத்தைக் கொண்டு ரூ.15,000 செலவில் அஸ்திவாரம் போட்டுள்ளனர். ஆனால் ரேஷன் கடை வரவேயில்லை. இது குறித்து பலமுறை அவர்கள் கேட்டும்அலட்சியமான பதில் தான் வந்துள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் கோவில் திருவிழாவின்போது சாமி ஊர்வலம் தங்களது பகுதிக்குள் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும்என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கோரினர். ஆனால் ஜாதி இந்துக்கள் அதை நிராகரித்து விட்டனர்.
வெறுத்துப் போன தாழ்த்தப்பட்ட மக்கள் கூண்டோடு இஸ்லாம் மதத்தைத் தழுவப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து மாநில பாரதீய ஜனதாக் கட்சியின் மகளிர் பிரிவுச் செயலாளர் லலிதா சுபாஷ் தலைமையில் ஒரு குழுகூத்திரம்பாக்கம் சென்றது. அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியது.
பின்னர் அவர்களின் கோரிக்கைளுடன் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியை இக்குழு சந்தித்துப் பேசியது.
தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்த்து வைக்குமாறு வருவாய் அதிகாரியை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.இதுகுறித்துப் பரிசீலிப்பதாக வருவாய் அதிகாரியும் உறுதி மொழி கொடுத்துள்ளார்.
இந்தச் செய்தியை கூத்திரம்பாக்கம் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பாரதீய ஜனதாக் கட்சியினர் தெரிவித்து, மதம் மாறுவது என்றமுடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை ஏற்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது முடிவை கைவிடுவதாகஉறுதியளித்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி!












Click it and Unblock the Notifications