குற்றால அருவிகளில் வெள்ளம்... குளிப்பதற்குத் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் போல கொட்டுவதால்அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் நல்ல மழைபெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வெள்ளம் போலகொட்டுகிறது.

மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, செண்பகா தேவி அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் பயங்கரமாகதண்ணீர் கொட்டுகிறது.

அருவிகளில் வெள்ளம் கொட்டுவதால் அவற்றின் அருகில் யாருமே செல்ல முடியவில்லை. இதையடுத்துஅருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.

இதனால் குற்றாலத்திற்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+