தீவிரவாதத்தை ஒடுக்க வந்தது பொடோ சட்டம்
என்ற புதிய அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் தீவிரவாத செயல்களிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபடுவோரைஒடுக்க தடா சட்டம் அமலில் இருந்து வந்தது. அந்த சட்டம் தற்போது அமலில் இல்லை.இதையடுத்து மத்திய அரசு பொடோ என்ற புதிய அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்தும், தீவிரவாத செயல்களிலிருந்தும் மக்களை காப்பதே இந்தசட்டத்தின் முக்கிய நோக்கம். அதை கருத்தில் கொண்டே இந்த சட்டம்இயற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை:
இந்க புதிய சட்டத்தின்படி ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்திஉயிரிழப்பு, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் நாட்டின் ஒற்றுமைக்குஊறுவிளைக்கும் செயல்களில் ஈடுபடுவது, மேலும் அத்தியாவசிய பணிகளுக்குஇடையூறு செய்வது போன்றவை தீவிரவாத செயல்களாக கருதப்படும்.
தீவிரவாத இயக்கங்களைச் சேர்நத்வர்கள் மீதும், அவர்களுக்கு நிதி உதவிஅளிப்பவர்கள் மீதும், தீவிரவாத இயக்கங்களுக்கு வேறு விதமான உதவிசெய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக் பொடோ சட்டம் வழி வகுக்கிறது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிக்கப்படும். குறைந்தபட்சமாக 5ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்படும்.
பொடோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் நியமிக்கப்படும். இந்த சட்டத்தின்கீழ் 23 இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜாமீன் பெற கடும் நிபந்தனை:
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் 1 ஆண்டு காலம் ஜாமீன் பெற கடும்நிபந்தனைகள் விதிக்கப்படும். 1 ஆண்டு கால சிறை தண்டனை முடிந்த பின் குற்றவியல்நடைமுறை விதிகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
பாஸ்போர்ட் பறிமுதல்:
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் 58வது பிரிவின்படி அவரதுபாஸ்போர்ட், துப்பாக்கி லைசென்சு ஆகியவற்றை இழந்துவிடுவார்.
பாஸ்போர்டையும், துப்பாக்கி லைசென்சையும் எத்தனை ஆண்டுகள் முடக்கி வைக்கவேண்டும் என்பதை தனி நீதிமன்றம் தீர்மானிக்கும். குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குதப்பிச் செல்லாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது.
தீவிரவாதிகளுடன் பழகினாலும் நடவடிக்கை:
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குஜாமீன் வழங்கப்பட மாட்டாது.
பயங்கரவாதிகள் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்காமல்மறைப்பவர்கள் மீதும், பயங்கரவாதிகளுடன் பழகிவிட்டு அவர்களை பற்றியவிவரங்களை தெரிவிக்க மறுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பொடோ வழிவகுக்கிறது.
தடா சடத்தின் கீழ் கைதானவரை அதிகபட்சமாக 60 நாட்கள் வரை போலீஸ் காவலில்வைக்கலாம். ஆனால் பொடோ சட்டத்தின் கீழ் கைதானவரை அதிகபட்சமாக 30நாட்கள்வரை மட்டுமே போலிஸ் காவலில் வைக்கமுடியும்.
தவறாகப் பயன்படுத்தத் தடை:
பொடோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அத்துமீறலில் ஈடுபடும் காவல்துறைஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்த சட்டத்தின் 57வது பிரிவு வழி வகுக்கிறது.
அத்துமீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையோ, அல்லதுஅபாரதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
மும்பை, சென்னை கொல்கத்தா, அகமாதாபாத் தவிர மற்ற நகரங்களில் பொடோசட்டத்தின் கீழ் கைதானவர் மீதான விசாரணையை துணை போலீஸ் கண்காணிப்பாளர்(டி.எஸ்.பி.) நடத்துவார்.
மும்பை, சென்னை கொல்கத்தா, அகமாதாபாத் நகரங்களில் உதவி கமிஷனர் பதவிக்குகுறையாத தகுதியுள்ள போலீஸ் அதிகாரி விசாரணை நடத்துவார்.
ஜனாதிபதி ஒப்புதல்:
பொடோ சட்டத்திற்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் ஒப்புதல் அளித்துவிட்டார்.இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
அடுத்தமாதம் (நவம்பர்) 13ம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
அமெரிக்காவில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து மத்திய அரசு இந்தக் கடும் சட்டத்தைஅறிமுகப்படுத்தியுள்ளது.
கடும் எதிர்ப்பு:
இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணையே இல்லாமல் கைது செய்ய முடியும். இது தடா சட்டத்தைவிட மிகக் கடுமையாகஉள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தீவிரவாதத் தடுப்புக்காக் கொண்டுவரப்பட்ட தடா சட்டம் அரசியல் காரணங்களுக்கு முறைகேடாகபயன்படுத்தப்பட்டதால் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியது.
நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அந்தச் சட்டமே ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில் பொடோ வந்துள்ளது. இதற்கும் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications