புதிய தீவிரவாத தடுப்பு சட்டத்துக்கு நெடுமாறன் கடும் எதிர்ப்பு
சென்னை:
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பொடோ சட்டத்துக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
இச் சட்டம் ஜனநாயக விரோதமானது என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீவிரவாதத்தைத் தடுக்க ஏற்கனவே பல சட்டங்கள் உள்ளன. இந் நிலையில் இந்தச் சட்டம் தேவையில்லாதது.
இந்தச் சட்டம் சிறுபான்மையினர், மனித உரிமைகளுக்காக போராடுபவர்கள், பத்திரிக்கையாளர்களின்சுதந்திர்ததுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.
இது மிசா சட்டத்தைவிடக் கொடுமையானது. நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்த இந்திரா காந்தி, மிசாசட்டத்தைக் கொண்டு யாரையெல்லாம் கொடுமைப்படுத்தினாரோ அவர்களே (பா.ஜ.க. தலைவர்கள்) தான்இப்போது பொடோ சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
மிசாவின் கீழ் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வாஜ்பாய் ஆகியோர் கைது செய்யப்பட்டதை நாடு இன்னும்மறக்கவில்லை.
தடா சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வழக்குகள பதிவாயின. ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆனால், இச் சட்டத்தின் கீழ் ஒரு சதவீத வழக்குகள் கூட நிரூபிக்கப்படவில்லை.
தீவிரவாதம் என்றால் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையே இன்னும் தீர்மானிக்கவில்லை. இந் நிலையில்தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு மக்களின் அடிப்படை சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டத்தை அரசுகொண்டு வந்திருப்பது சரியல்ல.
இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications