அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் உண்டு
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையையொட்டி வழங்கப்படும் அட்வான்ஸ்(முன்பணம்) இந்த ஆண்டும் வழக்கம் போல வழங்கப்படும் என அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்திகூறியுள்ளார்.
இந்த ஆண்டு தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பண்டிகை முன்பணத்தை விநியோகிக்கவேண்டாம் என்று அரசு, மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அரசின் நிதி நிலை மோசமானது குறித்து எதிர்க்கட்சியான திமுக பெரியஅளவில் பொதுமக்களிடம்தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து வழக்கம் போல பண்டிகை முன்பணத்தை வழங்குமாறுஅரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி கூறுகையில்,
முன்பணம் தொடர்பாக நிதியமைச்சர் பொன்னையன் மற்றும் நிதித்துறை செயலாளர் சந்தானத்தை அரசு ஊழியர்சங்கப் பிரதிநிதிகள்சந்தித்துப் பேசினர். அதன்பிறகு, முன்பணத்தை வழங்க நிதியமைச்சர் பொன்னையன் ஒத்துக்கொண்டார்.
எனவே, நவம்பர் முதல் வாரம் முன்பணமான ரூ.1000 அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் என்றார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications