கராத்தே தியாகராஜன் வெற்றியை எதிர்த்து வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் போட்டியிட அதிமுக கவுன்சிலர் கராத்தே தியாகராஜனுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
திருவான்மியூர் 155-வது வார்டு தேர்தலில் போட்டியிட்டவர் கராத்தே தியாகராஜன். அங்கு தேர்தல் முறைகேடுகள்அதிகஅளவில் நடந்ததாக கூறி மறு வாக்குப் பதிவும் நடந்தது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கையின்போதும்பெருமளவில் அராஜகம் நடந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கராத்தே தியாகராஜன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் துணை மேயர் தேர்தலில் கராத்தே தியாகராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் முறைகேடுகள் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் துணை மேயர்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில், 155-வது வார்டில் திமுக சார்பில்போட்டியிட்டுத் தோல்வியுற்ற துரை. சண்முகம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்கு எண்ணும் மையங்களைக் கைப்பற்றுதல் எனஅனைத்து அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகளில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
கிண்டி பொறியியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டபோது, அதிமுக ஏஜென்டைத் தவிர மற்ற ஏஜென்டுகளைவெளியே அனுப்பி விட்டனர். எனவே முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கராத்தேதியாகராஜனை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், உங்கள் தரப்பு ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றுகராத்தே தியாகராஜனிடம் கூறினார். அதற்கு அவர் நான் இன்னும் மனுவையே பார்க்கவில்லை என்றுதெரிவித்தார்.
பின்னர் கராத்தே தியாகராஜனின் சார்பில் ஆஜரான வக்கீல் எத்திராஜ், செவ்வாய்க்கிழமை ஆவணங்களைத் தாக்கல்செய்வதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications