கேரள எதிர்க்கட்சித் தலைவருக்கு தமிழக அமைச்சர் கண்டனம்
சென்னை:
கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதாநந்தன் கருத்துக்கு தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர்தளவாய் சுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள சட்டசபையில் பேசும் போது அம்மாநில எதிர்க்டசித் தலைவர் அச்சுதாநந்தன்கூறுகையில்,
தமிழக அரசு திட்டமிட்டுள்ள பம்பா-அச்சங்கோயில்-வைப்பாறு திட்டத்தின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடிஆகிய மாவட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க திட்மிட்டுள்ளது.
இதனால் கேரளாவில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தண்ணீர் விஷயத்தில் தமிழகஅரசிடம் கேரள மாநிலம் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கண்டனம் தெரிவித்துக்கூறியிருப்பதாவது:
கேரள எதிர்க்கட்சித் தலைவர் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் தமிழக அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழக அரசு தீட்டியுள்ள திட்டத்தினால் கேரள மாநில எல்லையில் உள்ள விவசாயிகள்பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
உண்மை நிலவரம் என்னவென்றால், மேக்காரா அருகே ஹனுமன் நதியின் குறுக்கே 174 அடி உயரத்திற்கு அணைகட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கிபாய்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் இந்த நதி இந்த 2 மாநிலங்களுக்கும் சொந்தமானதல்ல. அவர் கூறியிருப்பதைப் போல கேரளாவில் இருந்துடன்னல்கள் மூலம் அதைத் திருப்பித் தமிழகத்துக்குள் விடத் தேவையில்லை. முழுக்க முழுக்க தமிழகத்துக்குள் ஓடும்நதி அது. மேலும் அந்த அணையும் தமிழக எல்லைக்குள் தான் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கண்டனத்தை தெரிவித்து கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்ப இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications