எல்லாம் சுயேச்சை கவுன்சிலர்களின் கையில் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திலுள்ள 6 மாநகராட்சிகளிலும் நடக்கும் துணை மேயர் தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களின்வெற்றியை நிர்ணயிக்கப் போவது சுயேச்சை கவுன்சிலர்கள்தான்.

மாநகராட்சி துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சித் துணைத் தலைவர்கள் தேர்தல் புதன்கிழமைநடக்கவுள்ளது.

இதில், மாநகராட்சி துணை மேயர் தேர்தல்தான் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 6மாநகராட்சிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கப் போவது சுயேச்சைகவுன்சிலர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயேச்சை கவுன்சிலர்களைக் குறிவைத்தே வைத்தே பல அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைக் களத்தில்இறக்கியுள்ளன.

இதற்காக ரகசிய பேரங்கள் முன்பே ஆரம்பமாகி விட்டன. கடுமையான டிமான்டில் உள்ளனர் சுயேச்சைகவுன்சிலர்கள்.

சுயேச்சை கவுன்சிலர்களை அரசியல் கட்சிகள் உல்லாச சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று கவனிப்பது,அவர்களுக்குப் "பெட்டி"களைத் தள்ளுவது என பல நடவடிக்கைகளும் கடந்த சில நாட்களில் அரங்கேறியுள்ளன.

நடப்பது மறைமுகத் தேர்தல் என்பதால், எவ்வளவுதான் சுயேச்சைகளுக்காக அரசியல் கட்சிகள் பணத்தை வாரிஇறைத்தாலும் அவர்கள் கடைசியில் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தானே தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+