பட்டாசு வெடிக்க கட்டுப்பாடா? - வெடிக்கிறார் இல. கணேசன்
சென்னை:
தீபாவளிப் பண்டிகையின்போது இரவு நேரங்களில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை சுப்ரீம்கோர்ட் நீக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன்கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது சந்தோஷமான விஷயம்தான். ஆண்டுமுழுவதும் நம்மை பாதிக்கும் எத்தனையோ சுற்றுச்சூழல் சீர்கேடுகள் உள்ளன.
ஆனால் அவற்றை விட்டுவிட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே வரும் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுவெடிக்கத் தடை விதித்திருப்பது வருத்தம் தருகிறது.
பட்டாசுகளின் சப்தம் குறைக்கப்பட வேண்டும் என்று கோர்ட் கூறியதால் அதை ஏற்று பட்டாசு தயாரிப்பாளர்கள்குறைத்து விட்டனர். இப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றுகூறியிருப்பது வியப்பளிக்கிறது. இந்த கால நிர்ணயம் தேவையற்றது.
தீபாவளிப் பண்டிகையின் போது முதல் நாள் இரவிலிருந்தே பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். மேலும் தீபாவளிநாளன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது மரபு.
காலம் காலமாக கடைப்பிடித்து வரும் இந்த மரபை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அது நடக்கும் காரியமா?
வழிவழியாக கொண்டாடப்பட்டு வரும் மத நிகழ்ச்சியில் தலையிடுவது உள்நோக்கம் கொண்டது. ஏற்கனவே பலகிறிஸ்தவப் பள்ளிகளில் "தீபாவளியன்று பட்டாசு வெடிக்க மாட்டேன், அன்று மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பேன்"என்று மாணவர்களிடம் உறுதி வாங்கியுள்ளனர்.
இந்துக்கள் தங்களது பண்டிகையை எப்படிக் கொண்டாடலாம், எப்போது கொண்டாடலாம் என்பதை கணித்துச்சொல்ல வேண்டியது சாஸ்திரம் தெரிந்த ஆச்சாரியர்கள்தானே தவிர சட்ட வல்லுநர்கள் அல்ல என்று காட்டமாககூறியுள்ளார் இல.கணேசன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications