ராமேஸ்வரம் வந்தனர் 26 தமிழ் அகதிகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து நேற்று (புதன்கிழமை) 26 தமிழர்கள் தலா ரூ.15,000 படகுக் கட்டணமாகக் கொடுத்துஅகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் தொடர்ந்து சண்டை நடைபெற்றுவருவதால், அங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

இதுபோல நேற்று (புதன்கிழமை) 26 பேர் விசைப் படகு மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். அவர்கள்ஒவ்வொருவரும் படகுக் கட்டணமாக ரூ.15,000 கொடுத்து வந்துள்ளனர்.

அதிகாரிகளின் தீவிர விசாரணைக்குப் பிறகு அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களிடம் மீன்களைப் பறித்த இலங்கை கடற்படை

கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களைப் பறித்துச் செல்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சில மீன்வர்கள் இவ்வாறு 5 படகுகளில் சென்று மீன்பிடித்து விட்டுத் திரும்பும் போது,அவர்களிடமிருந்த பல லட்சம் மதிப்புள்ள மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சத்தீவு கடல்பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 பேரை,இலங்கைக் கடற்படையினர் மடக்கினர். அவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, தலைமன்னார் அருகேயுள்ளஒரு தீவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மீனவர்களைக் கடுமையாகத் தாக்கிய இலங்கை கடற்படையினர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்களையும்பறித்துக் கொண்டு அவர்களை அனுப்பிவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஒன்று கூடி, தமிழக கடலோரக் காவல்படை அதிகாரிகளிடம் புகார்கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+