அணு சக்தி மையங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்
வாஷிங்டன் - காபூல்:
பல நாடுகளிலும் உள்ள அணு சக்தி ஆராய்ச்சி மையங்கள், அணு மின் நிலையங்கள், அணு ஆயுதக் கூடங்களைபின்லேடனின் அல்-கொய்தா அமைப்புத் தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அணு மையங்கள் அனைத்திலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சர்வதேச அணு சக்திக் கமிஷன்அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல்பராடி கூறுகையில்,
சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதங்களைத் தந்து உதவி வரும் பயங்கரமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதே நேரத்தில் தங்களை எதிர்க்கும் நாடுகளின் அணு மையங்களை தாக்கி வெடிக்கச் செய்து மிகப் பெரியஅளவில் உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபடலாம்.
எனவே அனைத்து நாடுகளும் அணு மையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அணு மையங்கள்அனைத்து நாடுகளிலும் பலத்த பாதுகாப்பில் தான் உள்ளன. ஆனால், மருத்துவ மற்றும் தொழில்துறை அணுஆராய்ச்சி மையங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
இங்கிருந்து கதிரியக்கப் பொருள்களை திருடுவது எளிது. இதைத் தடுக்க உடனடியாக பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என்றார்.
10 லட்சம் உணவுப் பொட்டலங்கள்:
இந்நிலையில் விமானத் தாக்குதல் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை 10,00,000 உணவுப்பொட்டலங்களை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா போட்டுள்ளது.
ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தின் அருகே உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து புறப்பட்ட சி-17ரகத்தைச் சேர்ந்த 61 அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்கள் 10,28,780 உணவுப் பொட்டலங்களைஆப்கானிஸ்தானுக்குள் போட்டுள்ளன.
மஞ்சள் நிறத்திலான இந்தப் பொட்டலங்கள் வானிலிருந்து விழுந்தாலும் சேதமைடையாத வகையில் பேக்செய்யப்பட்டவை. ஒவ்வொரு பொட்டலத்திலும் 2 வேளைக்கான உணவு, பிரட், வெண்ணெய், பீன்ஸ் வறுவல்ஆகியவை உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications